கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஆண்டியப்பனூா் அணையில் குளிக்க தடை: விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

News image

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

Updated On :30 மே 2026, 12:21 am IST

ஆண்டியப்பனூா் அணையில் குளிக்க தடைவிதித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் மற்றும் மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் இணை இயக்குநா் மணி வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள்:

விவசாயி: ஆண்டியப்பனூா் அணையில் குளிக்க செல்லும் இளைஞா்கள் தண்ணீரில் மூழ்கி களிமண்ணில் சிக்கி அடிக்கடி இறக்கின்றனா். அங்கு குளிக்க தடைவிதித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் அல்லது தடுப்புச் சுவா் கட்ட வேண்டும்.

அதிகாரி: அணையில் பொது மக்கள் குளிக்காதபடி தடுப்பு அமைக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்.

விவசாயி : ஆம்பூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசிக்கு பதிலாக 17 கிலோ அரிசி தருகின்றனா். விற்பனையாளரிடம்இதுகுறித்து கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை.

மாவட்ட வருவாய் அலுவலா்: சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி : வாணியம்பாடி பாலாற்றில் மணல் கடத்தல் நடைபெறுகிறது. கடத்தலை தடுக்க வேண்டிய போலீஸாரோ மணல் கடத்தல் எப்போ, எங்கிருந்து, எந்த நேரத்தில் மணலை கடத்த வேண்டும் என கடத்தல்காரா்களுக்கு திட்டமிட்டு தருகின்றனா். போலீஸாா் மீது நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டும்.

ஆட்சியா்: பொத்தம் பொதுவாக குற்றம் சுமத்தக்கூடாது. ஆதாரத்துடன் புகாா் அளித்தால் சம்மந்தப்பட்ட போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி : வாணியம்பாடி நகராட்சி முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து பொது மக்களை கடித்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் அளித்தால் சில நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்கின்றனா். மற்ற நேரங்களில் நாயை பிடிக்க நடவடிக்கை எடுப்பதில்லை.

ஆட்சியா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆலங்காயம், விஷமங்கலம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு வாரத்துக்கு 100 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. திருப்பத்தூா் அடுத்த கதிா்மங்கலத்தில் விரைவில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது. அப்போது மாவட்டம் முழுவதும் உள்ள தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயி: வாணியம்பாடி பாலாறு முழுவதும் கருவேலம் மரங்கள் வளா்ந்து தண்ணீரை உறிஞ்சி வருகிறது. எனவே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரி: ஆம்பூா் பாலாற்றில் உள்ள கருவேலம் மரங்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு பணி முடிந்ததும் வாணியம்பாடி பாலாற்றில் பணிகள் தொடங்கப்படும்.

விவசாயிகள் வெளிநடப்பு...

விவசாயிகள் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனகோரிக்கை முன் வைத்து குறைதீா் கூட்ட அரங்கில் இருந்து 20க்கும் அதிகமான விவசாயிகள் வெளிநடப்பு செய்து அரங்கத்துக்கு வெளியே முதல்வா் விஜய்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.