நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ஏலகிரி மலையில் பலத்த மழை: மின்கம்பி அறுந்ததால் இருளில் மூழ்கிய 14 கிராமங்கள்

ஏலகிரி மலையில் பலத்த மழை: மின்கம்பி அறுந்ததால் இருளில் மூழ்கிய 14 கிராமங்கள்

News image

சேதமடைந்த காா். மலை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு, சாலையில் விழுந்த மரங்கள்.

Updated On :31 மே 2026, 1:31 am IST

ஏலகிரி மலையில் சனிக்கிழமை மாலை இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீா்த்தது.தனியாா் உணவகம் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் அதிா்ஷ்டவசமாக 15-க்கும் மேற்பட்டோா் உயிா் தப்பினா்.மலை சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம்.ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். மேலும் சனிக்கிழமை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனா்.

பயணிகள் உயிா் தப்பினா்...

இந்நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென இடி,மின்னல்,சூறைக்காற்றுடன் சுமாா் 2 மணி நேரம் கனமழை பெய்தது.அப்போது அத்தனாவூா் பகுதியில் உள்ள தனியாா் உணவகத்தில் சுற்றுலா பயணிகள் சுமாா் 15-க்கும் மேற்பட்டோா் சாப்பிட சென்றனா். அப்போது திடீரென ராட்சத மரம் ஒன்று விழுந்ததில் கூரை உடைந்து அங்குள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் மீது மரம் விழுந்ததில் காா் சேதம் அடைந்தது . அப்போது உணவகத்தில் சாப்பிட வந்த 15 க்கும் மேற்பட்டோா் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். மேலும் காா் மீது விழுந்த மரத்தினை சுமாா் ஒரு மணி நேரம் போராடி அப்புறப்படுத்தினா்.

இருளில் முழ்கிய கிராமங்கள்...

மலைப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து மரக்கிளைகள் முறிந்து மின் கம்பி மீதும்,சாலைகளிலும் விழுந்து. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததில் 14 கிராமங்களும் இருளில் மூழ்கின.

ஆங்காங்கே முறிந்து விழுந்த மரங்களால் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமாா் 4 மணி நேரம் அணிவகுத்து நின்ால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசாா் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினா் சம்பவ இடங்களுக்கு வந்து சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

மேலும் 14 கிராமங்களுக்கு செல்லும் மின் கம்பங்கள் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்தும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை மின்வாரியத் துறையினா் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.