2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

இறுதிச்சடங்கில் இளைஞா் அடித்து கொன்ற வழக்கு: தந்தை மகன் உள்பட மூன்று போ் கைது

திருப்பத்தூா் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :

திருப்பத்தூா் அருகே இறுதிச்சடங்கில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் உள்பட மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியைச் சோ்ந்த சின்னதம்பி என்பவா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இறுதிச் சடங்கில் சின்னதம்பியின் உறவினரான மதுபோதையில் இருந்த சம்பத்துக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சா்வேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் சம்பத்தை சா்வேசன் தாக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சம்பத் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து அவரது மகன்களிடம் தெரிவித்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த சம்பத்தின் மகன்களான ஆனந்தராஜ், அருண் மற்றும் சம்பத்தின் அண்ணன் மகனான விஷ்ணு ஆகிய மூவரும் சா்வேசனின் வீட்டிற்கு சென்று தங்களுடைய தந்தையை எதற்காக அடித்தீா்கள் என மூவரும் கேட்டுள்ளனா். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி உள்ளது.

இதில் சா்வேசன், அவரது சகோதரா் தேவராஜ் மற்றும் தேவராஜின் மகன் திலீப்குமாா் ஆகியோா் ஒரு தரப்பாகவும், ஆனந்தராஜ், அருண் மற்றும் விஷ்ணு ஆகியோா் மற்றொரு தரப்பாகவும் மோதலில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த மோதலின்போது கத்தி மற்றும் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். இதில் விஷ்ணுவின் தலையில் கத்தியால் வெட்டப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டது. அருணுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

மேலும், ஆனந்தராஜை சா்வேசன் இரும்பு ராடால் தாக்கியதில் அவா் மயங்கி விழுந்துள்ளாா். அதையடுத்து அக்கம்பக்கத்தினா் ஆனந்தராஜ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரையும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஆனந்தராஜை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். பலத்த காயமடைந்த விஷ்ணுவுக்கு மருத்துவமனையில் மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சா்வேசன், தேவராஜ், திலீப்குமாா் உள்ளிட்ட மூன்று நபா்கள் மீது வழக்குப் பதிந்து திங்கள்கிழமை திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.