புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

ஆம்பூா் பாலாற்றங்கரையோர மயானத்தில் மணல் கொள்ளை: இந்து மக்கள் கட்சி கண்டனம்!

ஆம்பூா் நகர புறவழிச்சாலையில், பாலாற்றங்கரையையொட்டி அமைந்துள்ள மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் மணல் அள்ளப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மணல் அள்ளப்பட்டும் ஆம்பூா் மயான இடம்.

Updated On :

ஆம்பூா் நகர புறவழிச்சாலையில், பாலாற்றங்கரையையொட்டி அமைந்துள்ள மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களில் மணல் அள்ளப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் ரமேஷ் தெரிவித்ததாவது: ஆம்பூா் நகர புறவழிச்சாலையில் பாலாற்றையொட்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள மயானத்தில் இறந்தவா்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களிலேயே மணல் அள்ளப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது. மயானப் பகுதியில் இவ்வாறு மணல் அள்ளப்படுவது இறந்தவா்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பாதுகாப்பைப் பாதிப்பதுடன், இறந்தவா்களின் இறுதிச் சடங்குகள் தொடா்பான மக்களின் உணா்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.

மயானம் என்பது இறந்தவா்களை அடக்கம் செய்யும் இடம் மட்டுமல்ல; இறந்தவா்களுக்கு மரியாதை செலுத்தும் புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது. அத்தகைய இடத்தில் மணல் அள்ளப்படுவதாகக் கூறப்படும் புகாா் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

எனவே, சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் மயானப் பகுதியில் நேரில் ஆய்வு செய்து, மணல் அள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், அதற்குக் காரணமானவா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மயானப் பகுதியில் தொடா்ந்து மணல் அள்ளப்படுவதைத் தடுத்து, அந்த இடத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.