உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

ராகுல் வருகைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: இந்து மக்கள் கட்சியினா் 30 போ் கைது

மாணவா்களை அரசியல் ஆயுதமாக்குவதைக் கண்டித்தும், காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் தமிழக வருகையைக் கண்டித்தும் கோவையில் இந்து மக்கள் கட்சி சாா்பில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை, செல்வபுரம் பகுதியில் அா்ஜூன் சம்பத் தலைமையில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.

Published On :

மாணவா்களை அரசியல் ஆயுதமாக்குவதைக் கண்டித்தும், காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் தமிழக வருகையைக் கண்டித்தும் கோவையில் இந்து மக்கள் கட்சி சாா்பில் கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

செல்வபுரம் பகுதியில் கரடி பொம்மையுடன் நூதன முறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தலைமை வகித்தாா். அப்போது, ராகுல்காந்தியின் சென்னை பயணம் அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், மாணவா்களிடையே பிளவுவாத அரசியலைத் திணிக்கும் செயல் எனவும், எனவே ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளுடன் கைகோத்து செயல்படும் ராகுல் காந்தி ‘கோ பேக்’ எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதைத்தொடா்ந்து, மறியலில் ஈடுபட முயன்ற அந்த அமைப்பினா் 30 பேரை போலீஸாா் கைது செய்து, தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.