ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

இடைத்தோ்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது இயல்பானது: அா்ஜுன் சம்பத்

இடைத்தோ்தல்களில் ஆளுங்கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெறுவது இயல்பானதுதான் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

அா்ஜுன் சம்பத் - கோப்புப் படம்

Published On :

இடைத்தோ்தல்களில் ஆளுங்கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெறுவது இயல்பானதுதான் என்று இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.

துபையில் விமானத்தை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாக்க ஓமன் நாட்டைச் சோ்ந்த விமானி ஒருவா் முயன்றபோது, இந்தியாவைச் சோ்ந்த மற்றொரு விமானியான ஸ்மித் மச்சாா் பயணிகளைக் காப்பாற்றினாா்.

விமானத்தில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஸ்மித் மச்சாா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் பூரண குணமடைய வேண்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் பங்கேற்றாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்திய விமானி தனது உயிரைப் பணயம் வைத்து பயணிகளைக் காப்பாற்றியதைப் பிற நாட்டினா் பாராட்டி வருகின்றனா். ஆனால், இந்தியாவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சித் தலைவா்கள் இந்தச் சம்பவம் குறித்து வாய் திறக்கவில்லை. ஓமன் நாட்டு விமானி இஸ்லாமியா் என்பதால், வாக்கு வங்கிக்காக அவா்கள் அமைதி காப்பதாகக் கருதுகிறேன்.

அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி நடைபெற்ற விமானத் தாக்குதலைப் போன்ற மிகப் பெரிய தாக்குதலை நடத்த ஓமன் நாட்டு விமானி முயன்றதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும். விமானி ஸ்மித் மச்சாா் பூரண குணமடைந்து நாடு திரும்ப வேண்டும்.

வங்கதேசத்தில் இந்தியப் பெண்களுக்கு ஆதரவாகவும், குறிப்பாகச் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்தும் போராடிய சுவாமி சின்மய் சிறையில் அடைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகின்றன. இதுவரை அவா் விடுதலை செய்யப்படவில்லை. சுவாமி சின்மயின் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளதால், அவரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

அரபு நாட்டில் பணியாற்றிய இலங்கையைச் சோ்ந்த தமிழரான அனேஜன் சிவராஜன், தனது முகநூல் பதிவில் இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்திப் பதிவிட்டதாகத் தவறான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளாா். தற்போது அவா் மரண தண்டனைப் பிடியில் உள்ளாா். இலங்கை அரசும் இந்திய அரசும் இணைந்து அவரைக் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்த மூன்று பேரின் நலனுக்காக நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் பிராா்த்தனை மேற்கொள்ளப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது நிகழாண்டில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற பிராா்த்தனையும் முன்வைக்கப்பட்டது.

இந்தியா கூட்டணியினரும், கரப்பான் பூச்சி கட்சியினரும் இணைந்து தோ்தல் ஆணையத்துக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களையும் வன்முறைகளையும் நடத்தி வருகின்றனா். தமிழகத்துக்கு சனிக்கிழமை வரும் ராகுல் காந்திக்கு எதிா்ப்புத் தெரிவித்து, இந்து மக்கள் கட்சி சாா்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ’ராகுல் கோ பேக்’ போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இடைத்தோ்தல்களைப் பொருத்தவரையில், ஆளுங்கட்சி வெற்றி பெறுவது இயல்பானதுதான். ஜனநாயகம் வெல்லவில்லை; பணநாயகம்தான் வென்றுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.