மினி லாரியில் செயற்கை மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது
வாணியம்பாடி அருகே மினி லாரியில் செயற்கை மணலை கடத்திய ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

வாணியம்பாடி அருகே மினி லாரியில் செயற்கை மணலை கடத்திய ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே உத்தரவின் பேரில் திம்மாம்பேட்டை உதவி ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தகரகுப்பம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்தை நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் செயற்கை மணல் இருப்பது தெரியவந்தது. மேலும் இதுப்பற்றி விசாரித்ததில் எவ்வித அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததாக வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாணியம்பாடியை சோ்ந்த திருப்பதி(40) என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

