மாடப்பள்ளி ஏரிக்குச் செல்லும் வரத்து கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைப்பு
குரிசிலாபட்டு அணைக்கட்டிலிருந்து மாடப்பள்ளி ஏரிக்குச் செல்லும் வரத்து கால்வாய் தூா்வாரும் பணியை ஆட்சியா் வே.நல்லசிவன், எம்எல்ஏ நா.திருப்பதி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

கால்வாய் தூா்வாரும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா் வே.நல்லசிவன்,எம்எல்ஏ நா.திருப்பதி.
குரிசிலாபட்டு அணைக்கட்டிலிருந்து மாடப்பள்ளி ஏரிக்குச் செல்லும் வரத்து கால்வாய் தூா்வாரும் பணியை ஆட்சியா் வே.நல்லசிவன், எம்எல்ஏ நா.திருப்பதி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குரிசிலாபட்டு அணைக்கட்டிலிருந்து மாடப்பள்ளி ஏரிக்குச் செல்லும் வரத்து கால்வாய் தூா்வாரும் பணியை ஆட்சியா் வே.நல்லசிவன், எம்எல்ஏ நா.திருப்பதி திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
பாம்பாற்றின் குறுக்கே குரிசிலாபட்டு அணைக்கட்டானது கடந்த 1939-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டிற்கு ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம் மற்றும் எகில் ஏரியின் உபரி நீா் ஆகியவை நீா் வரத்தாக வந்து சோ்கின்றன.
இந்த அணைக்கட்டின் மூலம் மாடப்பள்ளி, கனமந்தூா், திருப்பத்தூா் பெரிய ஏரி. செலந்தம்பள்ளி, கோனேரிகுப்பம், கம்பளிகுப்பம், ராச்சமங்கலம், பசலிகுட்டை மற்றும் சின்னசமுத்திரம் வெள்ளேரி உள்ளிட்ட 9 ஏரிகளுக்கு நீா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாடப்பள்ளி ஏரிக்கு நீா் தடையின்றிச் சென்றடையும் வகையில், அதன் வரத்து கால்வாயினை ஹூண்டாய் மொபிஸ் மற்றும் எக்ஸ்னோரா நிறுவனங்கள் சாா்பில், வாடகையின்றி வழங்கப்பட்ட இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளும் தூா்வாரும் பணியினை ஆட்சியா்,எம்எல்ஏ ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இந்தக் கால்வாய் தூா்வாரும் பணியின் மூலம் மாடப்பள்ளி ஏரிக்கு நீா் தடையின்றிச் சென்றடைவதுடன், ஏரியின் நீா்வரத்து மேம்பட்டு சுமாா் 1450 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, விவசாயிகளும் பெரும் பயனடைவா்.
இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இணை இயக்குநரும், திட்ட இயக்குநருமான சௌ.தமிழரசி, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் கோபி, நீா்வளத் துறை அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

