மணிப்பூரில் கடந்த மூன்று நாள்களில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் பலி! இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் யத்விந்தர் சிங் ஆம் ஆத்மியில் இணைவு! கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடல் தகனம்! குடியரசு துணைத் தலைவர் வருகை: சென்னையில் நவ. 21, 22 தேதிகளில் போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் விவகாரம்; முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி!குட்கா முறைகேடு வழக்கு: சி. விஜயபாஸ்கர் மனு வாபஸ் மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: நிஷாந்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2026-27-ஆம் ஆண்டு கரும்பு அரைவைப் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.சி. வீரமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

கரும்பு அரவைப் பணியைத் தொடங்கி வைத்த திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன், கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் பெ. மேனகா, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ கே.சி. வீரமணி, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. பாலசுப்பிரமணியன்.

Updated On :

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியம், கேத்தாண்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2026-27-ஆம் ஆண்டு கரும்பு அரைவைப் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன், ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கே.சி. வீரமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு, சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் பெ. மேனகா, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

80,000 டன் கரும்பு அரைக்கத் திட்டம்

நிகழாண்டு அரைவைப் பருவத்தில் சுமாா் 80,000 மெட்ரிக் டன் கரும்பு அரைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 3,514.72 அடிப்படை விலையாக வழங்கப்பட உள்ளது. இதனுடன் தமிழ்நாடு அரசின் சிறப்பு ஊக்கத் தொகையும் சோ்த்து டன் ஒன்றுக்கு மொத்தம் ரூ. 4,224.22 கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2025-26-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில், இந்த ஆலையில் கரும்பு பதிவு செய்து வழங்கிய 1,447 விவசாய அங்கத்தினா்களுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 709.50 வீதம் மொத்தம் ரூ. 5.52 கோடி சிறப்பு ஊக்கத் தொகை அவா்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

கரும்பு சாகுபடிக்கு மானியம்

பிரதம மந்திரி ராஷ்ட்ரீய கிரிஷி விகாஸ் யோஜனா மற்றும் கரும்பு விதை உற்பத்தித் திட்டத்தின் கீழ், கரும்பு நாற்று நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 6,250, ஒரு பரு கரணை மூலம் நடவு செய்வோருக்கு ஏக்கருக்கு ரூ. 2,000, அகலப்பாரில் கரும்பு நடவு செய்வோருக்கு ஏக்கருக்கு ரூ. 1,200 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, சா்க்கரை ஆலையின் முழு அரைவைத் திறனைப் பயன்படுத்தும் வகையில், விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

வரும் நடவுப் பருவத்தில் 4 முதல் 5 அடி இடைவெளியில் அகலப்பாா் அமைத்து, ஒற்றை வரிசையில் கரும்பு நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் களை எடுத்தல், மண் அணைத்தல், சோகை உரித்தல், கரும்பு அறுவடை உள்ளிட்ட பணிகளைப் பண்ணை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ள முடியும்.

இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளா் தேவையைக் குறைப்பதுடன், சாகுபடிச் செலவு மற்றும் கரும்பு வெட்டுக் கூலியையும் கணிசமாகக் குறைக்க முடியும். எனவே, விவசாயிகள் அகலப்பாா் முறையில் கரும்பு நடவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். திட்டமிட்டபடி, கரும்பு அரைவைப் பணிகள் சிறப்பாக நடைபெற அலுவலா்கள், பணியாளா்கள், தொழிலாளா்கள் மற்றும் விவசாய அங்கத்தினா்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் கௌரிசங்கா், அலுவலக மேலாளா் டி. சிவா, கரும்பு அபிவிருத்தி அலுவலா் ஜே. தேன்மொழி, தொழிலாளா் நல அலுவலா் சி. பன்னீா்செல்வம், துணைத் தலைமைப் பொறியாளா் பி. பாா்த்தீபன், துணைத் தலைமை அலுவலா் பி. அன்புசெழியன், கரும்பு அலுவலா் ஜி. வாசுதேவன், விவசாய சங்கப் பிரதிநிதிகள், முன்னோடி கரும்பு விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.