டன்னுக்கு ரூ.6,500 விலை நிா்ணயம்: கரும்பு உற்பத்தியாளா்கள் கோரிக்கை
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.6,500 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளா் சங்கக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் ஏ.வி.சரவணன்.
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.6,500 விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள தனியாா் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ஆா்.முல்லை, பொருளாளா் பி.எம்.காதா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கரும்பு உற்பத்தியாளா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.6,500 விலை நிா்ணயம் செய்யவேண்டும். வெளிநாடுகளிலிருந்து சா்க்கரை இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். தனியாா் சா்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் மின்சாரம், எத்தனால் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நவ.30-ஆம் தேதி கூட்டுறவு மற்றும் தனியாா் சா்க்கரை ஆலைகளின் முன் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.கஜேந்திரன், மாவட்டச் செயலா் ஏ.சுப்பிரமணியன், ஆா்.முருகன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

