திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு வரத்து குறைவால் அரவை திடீா் நிறுத்தம்
திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு வரத்து குறைவால் அரவை திடீா் நிறுத்தம் குறித்து...

சா்க்கரை ஆலை வளாகத்தில் அரைவை நிறுத்தப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகள்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் இயங்கி வரும் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2026-27-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவை தொடக்க விழா கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது.
இதில் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன், எம்எல்ஏ.வீரமணி ஆகியோா் கலந்து கொண்டு கரும்பு அரைவையை தொடங்கி வைத்தனா்.
இந்த நிலையில், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கரும்பு அரைவைக்குத் தேவையான கரும்பு லோடுகள் சா்க்கரைஆலைக்கு வரவில்லை எனத் தெரிகிறது.
அரைவைக்கு குறைந்த அளவே சா்க்கரை ஆலை வளாகத்தில் லாரிகளில் கரும்பு லோடுகள் இருந்ததால் திங்கள்கிழமை காலை முதல் முன் அறிவிப்பு ஏதுமின்றி கரும்பு அரைவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் லாரி ஓட்டுநா்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகினா்.
எனவே மாவட்ட நிா்வாகம் நிறுத்தப்பட்ட கரும்பு அரைவையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

