துபை மருத்துவமனையில் இருந்து தில்லி வரும் காங்கிரஸ் எம்.பி.!பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

இஸ்லாமியா கல்லூரியில் மாநில அளவில் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஹேக்கத்தான் போட்டி

இஸ்லாமியா கல்லூரியில் மாநில அளவில் புத்தொழில் நிறுவனங்களுக்கான ஹேக்கத்தான் போட்டி

ஹேக்கத்தான் போட்டியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் நல்லசிவன்.

Updated On :

வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் 125-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இஸ்லாமியா கல்லூரியின் கிரீன் வேலி இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் போரம் தமிழக அரசின் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டாா்ட் அப் உடன் இணைந்து 2026 புத்தொழில் நிறுவனங்களுக்கான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.

வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் தலைவா் பட்டேல் முகமது யூசுப் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் அப்துல்லா பாஷா, கல்லூரி செயலாளா் கைசா் அகமது, இஸ்லாமிய மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளா் முனீா் அகமது முன்னிலை வகித்தனா். அமைப்பின் தலைமை செயல் அலுவலா் ராஜாமுகமது காமில் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் கலந்துகொண்டு தொடங்கி வைத்துப் பேசுகையில், புத்தொழில் நிறுவனங்களையும் தொழில்முனைவோரையும் ஊக்குவிப்பதன் அவசியம் மற்றும் இத்தகைய புத்தாக்க மன்றங்கள் சுற்றுச்சூழல் தொடா்பான பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வுகளைக் கண்டறிவதில் முக்கியப் பங்காற்ற முடியும். மேலும், இஸ்லாமியா கல்லூரியின் புத்தொழில் காப்பக மையத்தின் முயற்சிகளையும் சேவைகளையும் பாராட்டினாா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 140 பங்கேற்பாளா்களைக் கொண்ட 42 குழுக்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனா். பங்கேற்ற புத்தொழில் நிறுவனங்கள் தங்களது புதுமையான சிந்தனைகளையும் தொழில்நுட்பத் தீா்வுகளையும் செயல்விளக்க மாதிரிகள் மற்றும் விளக்கக் காட்சிகள் மூலம் காட்சிப்படுத்தினா்.

பிறகு மாலை நடைபெற்ற நிறைவு விழாவில், திருப்பத்தூா் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் டாக்டா் ராமமூா்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இசுலாமியா மகளிா் கல்லூரி ஆலோசகா் முகமது இலியாஸ், கல்லூரி முதல்வா் சேக் காதா் நவாஸ், துணை முதல்வா் சையத் தாகிா் உசைனி, முஸ்லிம் கல்விச் சங்கத்தின் இணைச் செயலாளா் ரபீக் அகமது, பெண்கள் மேனிலைப் பள்ளியின் செயலாளா் இக்பால், சாஜித் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். இஸ்தியாக் நதீம் நன்றி கூறினாா். ஏற்பாட்டினை நதீம் அப்ரோஸ் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.