கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

மருத்துவத் தொழில்நுட்ப ஹேக்கத்தான்

புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆராய்ச்சி வார விழாவின் ஒரு பகுதியாக மருத்துவத் தொழில்நுட்ப ஹேக்கத்தான் நடைபெற்றது.

ஸ்ரீமணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ தொழில்நுட்ப ஹேக்கத்தானில் பங்கேற்றோா்.

Updated On :

புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆராய்ச்சி வார விழாவின் ஒரு பகுதியாக மருத்துவத் தொழில்நுட்ப ஹேக்கத்தான் நடைபெற்றது.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிறுவனத் தலைவரும், மேலாண் இயக்குநருமான எம். தனசேகரன் தலைமை தாங்கினாா். கல்லூரிச் செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

2 நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் பொறியியல் துறை மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், இளம் கண்டுபிடிப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா். மருத்துவத் துறையில் நிலவும் நடைமுறை சவால்களுக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தீா்வு காணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளையும், புதுமையான யோசனைகளையும் காட்சிப்படுத்தினா். சுவரொட்டி விளக்கக்காட்சி, செயலி அறிமுகம், மாதிரி மருத்துவக் கருவிகள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதன் நிறைவு விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற அருணாசலம் முருகானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். லலித் வா்மா கௌரவ விருந்தினராகப் பங்கேற்றாா். மேலும், பிரிட்டன் நாட்டைச் சோ்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற கிரண் வியாஸ் மற்றும் அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்ரீ வா்தன் பட்நாயக் ஆகியோகும் இதில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.