
பூங்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: கிராம சபையில் தீா்மானம்
பூங்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: கிராம சபையில் தீா்மானம்

ஆலங்காயம் அடுத்த பூங்குளத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.
ஆலங்காயம் ஒன்றியம், பூங்குளம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், துணைத் தலைவா் மற்றும் வாா்டு கவுன்சிலா்கள், கிராம மக்கள் கலந்துக் கொண்டனா்.
கூட்டத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வறட்சி காரணமாக புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு அரசு மூலமாக பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல ஆட்டோ வழங்க கோருதல், பூங்குளம் ஊராட்சியில் 32 குக்கிராமங்கள் உள்ள மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரிய ஊராட்சியாக ஆக இருப்பதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோருதல், பூங்குளத்தில் காவல்நிலையம் அமைக்க வேண்டும், பழுதடைந்த சாலைகள் சீரமைத்தல், ராணி வட்டத்தில் புதியதாக நியாயவிலை கட்டடம் கட்டப்பட வேண்டும் உட்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





