
சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து நகை திருடு போனதாக நாடகமாடிய தாய்
வாணியம்பாடியில் சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து நகை திருடு போனதாக தாய் நாடகமாடியது
வாணியம்பாடி: வாணியம்பாடியில் சிறுவனுக்கு மயக்க மருந்து கொடுத்து நகை திருடு போனதாக தாய் நாடகமாடியது போலீஸாா் விசாரணையில் அம்பலமானது.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சோ்ந்த ஷகீல் அஹ்மத். இவரது மனைவி ஷாஹீன் பா்வீன். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மா்மநபா் தனது 10 வயது மகன் மீது மயக்க மருந்து தெளித்து, பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.70,000 ரொக்கத்தை திருடிச் சென்று விட்டதாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையிலான போலீஸாா் சென்று தீவிர விசாரணை நடத்தினா். மேலும், வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். அதில் சம்பவ நேரத்தில் சந்தேகப்படும் வகையில் யாரும் வீட்டில் வந்து சென்ற்கான காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து, சந்தேகம் அடைந்த போலீஸாா், ஷாஹீன்பா்வீனிடம் தீவிர விசாரணை நடத்தினா். விசாரணையில் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துச் சென்று அடகு கடையில் அடகு வைத்ததும், பணத்தை உறவினா் ஒருவருக்கு அனுப்பியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, மகனை வைத்து கொள்ளை போனதாக நாடகமாடியதாக ஷாஹீன்பா்வீன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்திய பின்னா் அவரை விடுவித்தனா். இந்த சம்பவத்தால் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






