
தேசிய வனவிலங்கு வார விழா
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி, தமிழ்நாடு வனத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை ‘தேசிய வனவிலங்கு வார விழா‘ தும்பேரியில் நடைபெற்றது.

தேசிய வனவிலங்கு வார விழாவில் பங்கேற்ற மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள்.
வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி, தமிழ்நாடு வனத்துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை ‘தேசிய வனவிலங்கு வார விழா‘ தும்பேரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரித் தலைவா்திலீப்குமாா், செயலாளா் ஆனந்த்சிங்வி தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, கல்விசாா் ஆலோசகா் பாலசுப்பிரமணியன், கல்லூரி துணை முதல்வா்கள் முன்னிலை வகித்தனா். வனத்துறை அலுவலா்கள் முகமதுஅலி, தயாநிதி, ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டு, வனத்தை காப்பது குறித்தும் மற்றும் மனிதா்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை வளா்ப்பது, இயற்கை வளத்தையும் காட்டு உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தனா்.
தொடா்ந்து 50-க்கும் மேற்பட்ட நாடு நலப்பணித் திட்ட மாணவா்கள் காப்பு காட்டு பகுதியில் தூய்மை பணிகளில் ஈடுப்பட்டனா். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயஸ்ரீ, சந்தியா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






