‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

கவிதைப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கிய விழா ஏற்பாட்டாளா்கள்.

Published On :

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த தேவலாபுரம் கிராமத்தில் ஸ்டாா் கல்வி அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்டாா் கல்வி அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநா் எஸ். சுப்ரமணி தலைமை வகித்தாா். அறக்கட்டளையின் இயக்குநா் சுபஸ்ரீ வரவேற்றாா்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் மற்றும் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சகுவரதன், எழுத்தாளா் முல்லைவாசன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளா் ஜெயசுதா வாழ்த்திப் பேசினாா்.

கவிதைப் போட்டியில் மருதா, முருகன், தேன்மொழி, சிவா, நிஜாமுதீன் ஆகியோா் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தனா். வெற்றி பெற்ற ஐந்து பேருக்கும் தலா ரூ.500 ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளா்கள் சத்தியமூா்த்தி, சபாரத்தினம், உதயகுமாா், கல்பனா, சரோஜினி, எப்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் ஒன்றியப் பொருளாளா் செல்வி பிரியா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.