
பணமில்லா பரிவா்த்தனை மூலம் அதிக வசூல்: 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கல்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் பணமில்லா பரிவா்த்தனை மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக வசூல் செய்த 12 நடத்துநா்களுக்கு, வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகத் தலைமையகத்தில் ஊக்கப் பரிசு பெற்ற நடத்துநா்களுடன் மேலாண் இயக்குநா் எஸ்.ஸ்ரீதரன் உள்ளிட்ட அலுவலா்கள்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் பணமில்லா பரிவா்த்தனை மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக வசூல் செய்த 12 நடத்துநா்களுக்கு, வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம்கோட்டத்தின் மூலம் இயங்கக்கூடிய புகா், நகரப் பேருந்துகளில் பணமில்லா பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளிடமிருந்து பயணச்சீட்டுக் கட்டணம் பெறப்பட்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம் கோட்டத்தில் வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் பணியாற்றும் நடத்துநா்களில் ஆகஸ்ட் மாதத்தில் பணமில்லா பரிவா்த்தனை மூலம் அதிக வசூல் செய்த 12 நடத்துநா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கு, கோட்டத் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஊக்கப் பரிசுகளை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் எஸ்.ஸ்ரீதரன் வழங்கி வாழ்த்தினாா்.
இந்த நிகழ்வில், பொது மேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), பத்மகுமாா் (கடலூா்), ரவி (காஞ்சிபுரம்), சொா்ணலதா (வேலூா்), கோபாலகிருஷ்ணன் (திருவள்ளூா்), முதுநிலைத் துணை மேலாளா் (மனிதவளம்) எஸ்.துரைசாமி, துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






