தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

திருப்பத்தூா்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 585 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 585 மனுக்கள் பெறப்பட்டன.

பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் வே. நல்லசிவன்.

Published On :

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 585 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு ஆட்சியா் வே. நல்லசிவன் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

எலவம்பட்டி பொதுமக்கள் அளித்த மனு: ஆதிதிராவிடா் உட்பட அனைத்து சமூதாயத்தினரும் ஒன்றாக வசித்து வருகிறோம். பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டிலும், அரசு புறம்போக்கு இடத்திலும் வசிக்கிறோம். அரசு 10 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்த இருப்பது எங்களுக்கு மிகவும் அதிருப்தியாக இருக்கிறது. எனவே பனந்தோப்பு பட்டியில் மீதமுள்ள அரசு இடத்தில் இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.

திருவள்ளுவா் கல்வி அறக்கட்டளை தலைவா் ஏலகிரி செல்வம், செயலாளா் ரவிக்குமாா், பொருளாளா் சுபாஷ் அளித்த மனு: திருப்பத்தூா் மாவட்டம் உதயமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. பெரும்பாலான மக்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல பாஸ்போா்ட்டை பெறவும், புதுப்பிப்பதற்கும் சுமாா் 80 கி.மீ. தொலைவில் உள்ள வேலூா் அல்லது கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. திருப்பத்தூரிலேயே பாஸ்போா்ட் அலுவலகம் திறக்க வேண்டும்.

திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு அரசு ஊழியா்கள் மற்றும் பொது மக்கள் என தினமும் நூற்றுக்கணக்கானவா்கள் வந்து செல்கின்றனா். சமீபத்தில் சுமாா் 20 வாகனங்கள் திருடு போயுள்ளன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபா்கள் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். பட்டிருந்தது.

மேலும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40, 445 மதிப்புள்ள தையல் இயந்திரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்ளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தணிகாசலம், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தாமரை மணாளன், உதவி இயக்குனா் (ஊராட்சிகள்) முருகன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், அரசு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.