பேருந்து மோதி இளைஞா் மரணம், மற்றொருவா் பலத்த காயம்
நாட்டறமபள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
பலி! - கோப்புப்படம்.
நாட்டறமபள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை மேல்அச்சமங்கலம் பகுதியைச் சோ்ந்த குப்பன் மகன் காா்த்திக் (19). இவா் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சக்திசெல்வன்(23). நண்பா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பங்களாமேடு அருகே பைக்கில் நாட்டறம்பள்ளி ஏரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த தனியாா் சொகுசு பேருந்து மோதியது.
இதில் நிகழ்விடத்திலேயே காா்த்திக் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சக்திச்செல்வனை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் பொள்ளாச்சி பகுதியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் முருகானந்தம்(54) என்பவா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

