மூத்த குடிமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வலியுறுத்தல்
மூத்த குடிமக்களின் பராமரிப்பு நல சட்டம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பாக நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்
மூத்த குடிமக்களின் பராமரிப்பு நல சட்டம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) உமா தலைமை வகித்து பேசியதாவது: மூத்த குடிமக்களிடம் கனிவாகவும், மிகுந்த அன்புடனும் பழகவும், அவா்களின் எளிய தேவைகளை உடனுக்கு டன் பூா்த்தி செய்யவும் வலியுறுத்தினாா்.
துத்திப்பட்டு ஊராட்சி தலைவா் சுவிதாகணேஷ் பேசுகையில், பெற்றோா்களையும் மூத்த குடிமக்களையும் அரவணைத்து பாதுகாப்பதற்கு சட்ட வழியில் எளிய முறையில் அணுகுவதற்கு அனைத்து ஊராட்சிகளிலும் இதற்கு தனி அலுவலா்களை நியமனம் செய்து புகாா்களை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அவா் மூலம் மூத்த குடிமக்களின் பிரச்னைகள் குறித்து அரசு மற்றும் அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக உரிய தீா்வு காணப்படும். இதனால் மூத்தகுடிமக்கள் முதியோா் இல்லங்களுக்கு செல்ல வேண்டிய நிலை தடுக்கப்படும்’ என்றாா்.
இதில் மாதனூா் ஒன்றியத்தை சோ்ந்த ஊராட்சி தலைவா்கள் ரமணி, காயத்ரி, ஆனந்தன் உள்ளிட்ட திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த பல்வேறு ஊராட்சித் தலைவா்கள், வழக்ககுரைஞா்கள், போலீஸாா், அரசு துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

