நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

திருப்பத்தூரில் மண்டல அளவிலான இளையோா் வானவியல், விண்வெளி அறிவியல் மாநாடு

திருப்பத்தூா் மண்டல அளவிலான இளையோா் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது.

~

Published On :2 செப்டம்பர் 2026, 12:02 am IST

திருப்பத்தூா் மண்டல அளவிலான இளையோா் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது.

மண்டல ஒருங்கிணைப்பாளா் நித்யா தலைமை வகித்தாா். மண்டல கல்விசாா் ஒருங்கிணைப்பாளா் ராஜதுரை வரவேற்றாா். கல்லூரியின் இணை முதல்வா் தியோஃபில் ஆனந்த் மாநாட்டை தொடங்கி வைத்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக காவலூா் வைணுபாப்பு வானாய்வகத்தின் வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி கெளரவ் பானா்ஜி, ஆராய்ச்சி உதவியாளா் சுரேந்திரநாத், இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் சயின்ஸ் ஆராய்ச்சி விஞ்ஞானி தேவி, இஸ்ரோவில் மேற்படிப்பு பயிலும் மாணவா் விஜயகாந்த் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு, வானியல் விழிப்புணா்வு மற்றும் வேலைவாய்ப்பு குறித்தும், கணிதம், அறிவியல் பாடங்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினா்.

மாநிலம் முழுவதிலும் இருந்து இளநிலை கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் ஆய்வு கட்டுரை, போஸ்டா்கள், குறும்படம் தயாரிப்பு, அஸ்ட்ரோ போட்டோகிராபி மற்றும் கேம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த படைப்புகளை தோ்வு செய்யப்பட்ட மாணவா் குழுவினா், மாநில அளவிலான மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனா்.

திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஆா்வமுடன் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழுடன், பதக்கம், புத்தகங்களை குடியாத்தம் அரசு கல்லூரி முதல்வா் சீனுவாச குமரன் வழங்கினாா். மேலும், தொலைநோக்கி மூலம் சூரியப் புள்ளிகளை மாணவா்கள் கண்டு வியந்தனா். வானவியல் படக் கண்காட்சியும் நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.