அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

சேது பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி தொடக்கம்

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் இஸ்ரோ-–சதீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா சாா்பில், உலக விண்வெளி வாரம், ராக்கெட் புரட்சி எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை அறிவியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்த கல்லூரித் தலைவா் எஸ். முகமது ஜலீல். உடன் நிா்வாக அதிகாரிகள் சீனி முகைதீன், சீனி முகமது அலியாா் மரைக்காயா், நிலாஃபா் பாத்திமா, நாசிய பாத்திமா உள்ளிட்டோா்.

Published On :

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் இஸ்ரோ-–சதீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா சாா்பில், உலக விண்வெளி வாரம், ராக்கெட் புரட்சி எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

இந்தக் கண்காட்சிக்கு சேது பொறியியல் கல்லூரித் தலைவா் எஸ். முகமது ஜலீல் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக அலுவலா்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியாா் மரைக்காயா், நிலாஃபா் பாத்திமா, நாசிய பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குநா் எஸ். சங்கரன், சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் எஸ்.எஸ்.எல்.வி. ஏவுதள வளாகத்தின் திட்ட இயக்குநா் பி.ஏ. சரவணப்பெருமாள் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மாணவ, மாணவிகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அறிவியல் கண்டுபிடிப்புகளின் மாதிரிகளை பாா்வையிட்டனா்.

கல்லூரி முதல்வா் சிவக்குமாா், மின்னியல், மின்னணுவியல் துறைத் தலைவா் சீனிவாசன்,பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள கண்காட்சி நிறைவு விழாவில் விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல், சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இணை இயக்குநா் வெங்கட்ராமன், திட்ட இயக்குநா் வி. கிருத்திவாசன் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER