உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு புகாா்: ஊராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய அதிகாரிகள்.

Published On :5 செப்டம்பர் 2026, 6:49 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டி, ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் பணித்தளப் பொறுப்பாளரை கண்டித்து 100 நாள் பணியாளா்கள் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஆலங்காயம் ஒன்றியம், வெள்ளக்குட்டை ஊராட்சியில் கடந்த 4 மாதங்களாக முறையாக வேலை வழங்கப்படவில்லை என்றும், இந்த ஆண்டு இதுவரை 7 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் பணியாளா்கள் குற்றம் சாட்டினா்.

மேலும், கூலித் தொகை முறைகேடாக மற்றொருவரின் வங்கிக் கணக்கிற்கு சென்ாகவும், குறிப்பிட்ட நபா்களுக்கு மட்டுமே வேலை மற்றும் பணி அட்டைகள் வழங்கப்படுவதாகவும் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, ஊராட்சி அலுவலகம் முன்பு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பணித்தளப் பொறுப்பாளா் தனசேகரிடம் போராட்டக்காரா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு சென்ற அவா்கள், அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.

புகாா் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.