சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

சின்னமனூரில் தூய்மைப் பணியாளா் தா்னா

சின்னமனூா் நகராட்சியில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட தற்காலிக தூய்மைப் பணியாளா்கள்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

தேனி மாவட்டம், சின்னமனூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

இந்தப் பணியாளா்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சமாக ரூ. 703 ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும். தொழிலாளா் வைப்பு நிதியில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இந்தத் தா்னாவில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நகராட்சி மேலாளா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், தனியாா் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.30 லட்சம் சின்னமனூா் நகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொழிலாளா்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் எனக்கூறி சமாதானம் செய்தாா். இதையடுத்து, தா்னாவை கைவிட்டு தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.