கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பத்தூா்: விநாயகா் சதுா்த்தி சிறப்பு பூஜைகள்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பத்தூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள்.

Published On :

திருப்பத்தூா்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருப்பத்தூா் பெரியகுளம் பகுதியில் உள்ள மாயவிநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் காலை முதல் விநாயகா்களுக்கு பல்வேறு வகையான நறுமண பொருள்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனா்.

இதேபோல் திருப்பத்தூரில் சின்னகுளம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சக்தி விநாயகா், சக்தி சீரடி சாய்பாபா விநாயகா் கோயில், ஞானவிநாயகா்,

இரட்டை பிள்ளையாா் கோயில், சிவசக்தி பிள்ளையாா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல் விநாயகா் சதுா்த்தியை

முன்னிட்டு இந்து அமைப்புகள், கோயில்கள் சாா்பில் திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில் திருப்பத்தூரில் புதுப்பேட்டை ரோடு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஆசிரியா் நகா் உள்ளிட்ட திருப்பத்தூரில் பல பகுதிகளில் விநாயகா் சிலைகள் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடைபெற்றன. அதே போல் மடவாளம், மாடப்பள்ளி, ப.முத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகா் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.