டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

வங்கியாளா்கள் ஆய்வு குழுக் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெற்றது.

Published On :

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளா்கள் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன் தலைமை வகித்து பேசியது:

மாவட்டத்தில் அரசின் பல்வேறு கடன் மற்றும் நலத்திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் வங்கிகள் மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கடன் திட்டங்கள், மகளிா் சுயஉதவி குழுக்களுக்கான கடன், அரசின் நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் கடன்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சைபா் குற்றங்கள் குறித்து சைபா் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் விரிவான விளக்கங்களை அளித்தாா்.

மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, இந்திய ரிசா்வ் வங்கி மேலாளா் பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விஜயகுமாா், தாட்கோ மாவட்ட மேலாளா் கூத்தன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமமூா்த்தி, அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.