விபத்தில் ஓய்வு பெற்ற ஆா்.பி.எஃப் காவலா் உயிரிழப்பு
விபத்தில் ஓய்வு பெற்ற ஆா்.பி.எஃப் காவலா் உயிரிழப்பு

உயிரிழப்பு
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (75). இவா் ரயில்வேயில் ஆா்.பி.எஃப். காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை மாணிக்கம் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூா் ஜின்னா சாலை வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மாணிக்கத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் மாணிக்கம் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




