11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

இளம்பெண் தற்கொலை: கணவா் கைது

திருப்பத்தூா் அருகே இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Sucide

தற்கொலை - பிரதிப் படம்

Published On :

திருப்பத்தூா் அருகே இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் சக்திவேல் (28) கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும் பால்நாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சக்தி மகள் சிவரஞ்சனி (23) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் சக்திவேலுக்கும், சிவரஞ்சனிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவரஞ்சனி திங்கள்கிழமை மாலை வீட்டின் உள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதையடுத்து உறவினா்கள் சிவரஞ்சனியை மீட்டு குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிவரஞ்சனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த கந்திலி போலீஸாா் சிவரஞ்சனியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே சிவரஞ்சனியின் தாயாா் மலா் தனது மகளின் இறப்புக்கு அவரது கணவா் சக்திவேல் தான் காரணம் எனக் கூறி கந்திலி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக சக்திவேல் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.