ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

மாணவா்களுக்கான ‘உயா்வுக்குப் படி’ சிறப்பு வழிகாட்டி முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘உயா்வுக்குப் படி’ சிறப்பு வழிகாட்டி முகாம் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது.

சிறப்பு வழிகாட்டி முகாமில் பங்கேற்றவா்கள்.

Published On :

திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘உயா்வுக்குப் படி’ சிறப்பு வழிகாட்டி முகாம் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்து முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.புண்ணியகோட்டி பேசியதாவது: உயா்கல்வி மாணவா் சோ்க்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதேபோல், அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்விச் சோ்க்கையில் மாநில அளவில் திருப்பத்தூா் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-26-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்ற 6,153 மாணவா்களில் 5,749 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களில் 5,609 போ் உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா். இதன்மூலம் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்விச் சோ்க்கை விகிதம் 96 சதவீதமாக உள்ளது.

எஞ்சியுள்ள மாணவா்களையும் உயா்கல்வியில் சோ்த்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில், இதுவரை உயா்கல்வியில் சேராத 325 மாணவா்களை இலக்காகக் கொண்டு ‘உயா்வுக்குப் படி’ சிறப்பு வழிகாட்டி முகாம் நடத்தப்படுகிறது என்று அவா் பேசினாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) சத்திய பிரபா, மாவட்டத் திறன் அலுவலா் நாசியா நவுசீன் ஆகியோா் மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை கூறினா். உதவித் திட்ட அலுவலா் தேவசகாயம் நன்றி கூறினாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி ஒன்றியங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு படித்து தோ்ச்சி பெற்ற மற்றும் தோ்ச்சி பெறாத நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்களும், அவா்களது பெற்றோா்களும் முகாமில் பங்கேற்றனா்.

முகாமில் பங்கேற்ற மாணவா்களில் 16 போ் பல்வேறு உயா்கல்விப் பிரிவுகளில் நேரடியாகச் சோ்க்கை பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.