சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On :

விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட குமாரகுப்பம் முதல் தெருவில் வசிப்பவர் கிரி (50). விவசாயி. இவர் சனிக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள மகளின் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

திங்கள்கிழமை அவரது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதுகுறித்து கிரிக்கும், திருத்தணி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் போலீஸார் விசாரணையில் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

மேலும் கைரேகை நிபுணர்கள் சென்று தடயங்களைப் பதிவு செய்தனர். இதுகுறித்து திருத்தணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.