தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருட்டு

குன்றத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 புவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :

குன்றத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 புவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

குன்றத்தூர் மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (47). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நர்மதா (40). தனியார் பள்ளி ஆசிரியர். இருவரும் வெள்ளிக்கிழமை காலையில் பணிக்குச் சென்று விட்டனர்.

இவர்களது மகள் ஸ்ரீமதியும் வீட்டைப் பூட்டி விட்டு பள்ளிக்குச் சென்றார். மாலையில் பள்ளி முடிந்து ஸ்ரீமதி வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.