வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு

திருத்தணி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வியாழக்கிழமை இறந்த சம்பவம் கண்டிகை கிராமத்தில்

News image
Updated On :2 நவம்பர் 2017, 10:01 pm

DIN

திருத்தணி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வியாழக்கிழமை இறந்த சம்பவம் கண்டிகை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரத்தை அடுத்த டி.என்.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (30), இவரது மனைவி சாந்தி 28). இவர்களின் ஒன்றரை வயது மகன் தினேஷ். வியாழக்கிழமை மாலை, வீட்டின் பின்புறம் தினேஷ் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர் அவரை காணவில்லையாம். இந்நிலையில், தினேஷை காணாததால் சாந்தி அவரை தேடியுள்ளார். 
அப்போது தினேஷ் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்டு பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் தினேúஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.