தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகைக்கு  30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள்

Updated On :9 ஏப்ரல் 2018, 1:05 am

திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகையைப் பெறுவதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தோருக்கு ரூ.300, பிளஸ் 2 மற்றும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி அடைந்தோருக்கு ரூ.400, பட்டப்படிப்பு முடித்தோருக்கு ரூ.600- என மாதந்தோறும் வழங்கப்பட இருக்கிறது. 
இதில் பயன்பெறுவோர் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்குக் குறைவான தகுதியுடையோருக்கு ரூ.600, பிளஸ் 2 மற்றும் தொழிற்கல்வி பட்டயப் படிப்பில் தேர்ச்சி அடைந்தோருக்கு ரூ.750, பட்டப்படிப்பு முடித்தோருக்கு ரூ.1000 என மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரையில் வயது வரம்பு கிடையாது. 
தகுதி: இதில் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 40-க்குள்ளும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 45-க்குள்ளும் இருக்க வேண்டும். மேலும், பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
இந்த உதவித் தொகையைப் பெற விரும்புவோர் தக்க சான்றிதழ்களுடன் வரும் 30-ஆம் தேதிக்குள் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து, விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.