உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தூய்மை பாரத விழிப்புணர்வுப் பேரணி

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை மற்றும் மேல்முதலம்பேடு ஆகிய பகுதிகளில் தூய்மை பாரத நாளையொட்டி, சுகாதாரப் பேரணி மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Updated On :19 ஏப்ரல் 2018, 4:15 am IST

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை மற்றும் மேல்முதலம்பேடு ஆகிய பகுதிகளில் தூய்மை பாரத நாளையொட்டி, சுகாதாரப் பேரணி மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் தயாநிதி மேற்பார்வையில் சுகாரதப் பணிகள் நடைபெற்றன. கீழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உள்பட்ட கவரப்பேட்டையில் ஊராட்சி செயலாளர் சாமுவேல் தலைமையில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
இதில், திறந்த வெளியில் குப்பை கொட்டக் கூடாது, திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. 
இதேபோல், மேல்முதலம்பேடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் மாரிமுத்து தலைமையில் தூய்மை பாரத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.