பொதுமக்கள் பயன்பெறும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் நலத்திட்ட உதவிகள் பெறவும் மற்றும் பல்வேறு குறைகள் குறித்து மனுக்கள் அளிக்கவும் நகரத்திற்கு வருகின்றனர். இதனால் ஏற்படும் வீண் அலைச்சல் மற்றும் பொருளாதாரச் செலவைக் குறைப்பதோடு, அந்தந்த கிராமப் பகுதிகளிலேயே தேவையான நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நேரில் பெற்றுக் கொள்ளவே அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம், வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 3) முகாம் நடைபெறவுள்ள கிராமங்களின் விவரம் வருமாறு: பொன்னேரி- புதுகுப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகிலும், திருத்தணி- எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், ஊத்துக்கோட்டை- வெம்பேடு கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், கும்மிடிப்பூண்டி- பாலவாக்கம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், திருவள்ளூர்- கல்யாணகுப்பம் கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும் உள்ள காலியிடங்களில் முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து மனுக்களை அளிக்கலாம். இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருப்பதால் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









