திருவள்ளூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில், வீட்டு வரி செலுத்துவோருக்கு இலவச துணிப்பைகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அடுத்த ஆண்டு முதல் முற்றிலும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளில் பேரணிகள் நடத்துதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்றவை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், திருவள்ளூர் நகராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மூலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில், துணிப்பைகளின் பயன்பாடு குறித்து ஒவ்வொருவரிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது, நகராட்சியில் வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்துவோருக்கு காய்கறிகள் வாங்க இலவச துணிப்பைகள் வழங்கப்படவுள்ளன. இதில், முதல் கட்டமாக ரூ.1 லட்சம் மதிப்பில், 10 ஆயிரம் துணிப்பைகள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கங்கையில் பிரியாணி சாப்பிட்டதற்கு 3 மாதம் சிறையா..?- உச்ச நீதிமன்ற நீதிபதி வேதனை

காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்ற மீராபாய் சானு - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!






