/

மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல், 5 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே, மணல் கடத்தலில்  ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 3 லாரிகள், 2 மாட்டு வண்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

திருவள்ளூர் அருகே, மணல் கடத்தலில்  ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 3 லாரிகள், 2 மாட்டு வண்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். 
திருவள்ளூர் பகுதியில் உள்ள கூவம் மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் பிரிவு ஓடைகளில் இருந்து, இரவு நேரங்களில் வாகனங்களில் மணல் கடத்துவதாக மாவட்டகாவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தகவல் வந்தது. அதன் அடிப்படையில், போலீஸார் இரவு நேரத்தில் ரோந்து செல்லுமாறு  காவல் கண்காணிப்பாளர் பொன்னி உத்தரவிட்டார். 
இதைத் தொடர்ந்து,  திருப்பாச்சூர்-பேராம்பாக்கம் சாலையில் திருவள்ளூர் கிராமிய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் கரையில் இருந்து லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சிலர் போலீஸாரை பார்த்ததும் தப்பியோடினர். பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சந்திரன், லாரி உரிமையாளர் ஆத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்(30) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, மணல் லாரியையும் பறிமுதல் செய்தனர்.  இதேபோல், கடம்பத்தூர் அருகே அதிகத்தூர் ஏரியில் மணல் திருடியதாக சரத்குமார்(25), மப்பேடு மேட்டுக்காலனி பகுதியில் லாரியில் மணல் கடத்தியதாக புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன்(27), புல்லரம்பாக்கம் அருகே ஈக்காடு ஏரியில் மணல் திருட்டில் ஈடுபட்ட சதாசிவம்(45) ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து, 2 லாரிகள் மற்றும் 2 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.