திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சுகந்திர தினவிழா பொது விருந்தில் அரக்கோணம் எம்.பி. கோ.அரி உள்பட 2,500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அறுபடை வீடுகளில் 5 -ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டு தோறும் சுதந்திர தினவிழாவில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்று வருகிறது.
அதேபோல், 72-ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு முருகன் கோயிலில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சிக்கு கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி தலைமை வகித்தார். கோயில் தக்கார் வே.ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். இதில், எம்.பி. கோ.அரி கலந்து கொண்டு பொது விருந்தை தொடங்கி வைத்தார்.இந்த விருந்தில் 2500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் கோயில் நிர்வாகம் சார்பில் 500 பக்தர்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது. இதில், கோயில் அலுவலர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள்!

தில்லி மாணவர் போராட்டம்! ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு!

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (ஆக. 18, 19) மழை!

”இனி இதை அனுமதிக்க முடியாது” அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


