மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர் கைது

பொன்னேரி அரசுக் கல்லூரியில் போலி முனைவர் பட்ட சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.  

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பொன்னேரி அரசுக் கல்லூரியில் போலி முனைவர் பட்ட சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.  
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மகாலிங்கம்(40), தனது கல்லூரி படிப்புச் சான்றிதழை அளித்து பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார்.  இதனை தொடர்ந்து இவரின் படிப்பு சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக சென்னையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. 
அப்போது, பிகார் மாநிலத்தில்  உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றதாக இவர் அளித்துள்ள சான்றிதழ் போலியானது என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கல்லூரி தரப்பில் இருந்து பொன்னேரி காவல் நிலையத்தில் மகாலிங்கம் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிந்து,   போலி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் பணியாற்றி வந்த மகாலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.