8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கிராம சபைக் கூட்டத்தை நடத்த விடாமல் இளைஞர்கள் போராட்டம்

திருத்தணியில் உள்ள இரண்டு ஊராட்சிகளில் கிராம மக்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதால்,

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருத்தணியில் உள்ள இரண்டு ஊராட்சிகளில் கிராம மக்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சியில், சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை காலையில் தொடங்கியது.
 அப்போது, கூட்டத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இந்த ஊராட்சியில் உள்ள 7 குக்கிராமங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், ஊராட்சி செயலர் தனக்கு வேண்டிய பத்து நபர்களை மட்டும் வைத்து கிராம சபையை நடத்துகிறார். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறி முற்றுகைப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து வந்த திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் இருதரப்புக்கும் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இதே போல், சிறுகுமி ஊராட்சியில் கிராம சாலைக்கு இடையூறாக தனிநபர் வீடு கட்டுவதை தடுத்து நிறுத்திய பிறகுதான் கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த திருத்தணி ஒன்றிய ஆணையர் சிறுகுமி கிராம மக்களிடம் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. 
இதில், ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மீதமுள்ள 25 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் குறித்த நேரத்தில் அமைதியாக நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.