பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம்

புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது குறித்து...

Parliament complex Congress criticizes

நாடாளுமன்ற வளாகத்தில்... - எக்ஸ்

Published On :

புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், வளாகத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், புதிய நாடாளுமன்ற கட்டட திட்டமிடலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் ஒரு வாயில் அருகே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் விடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்து, நரேந்திர மோடியின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை விமர்சித்துள்ளது.

இது தொடர்பான விடியோவில், ''கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து நரேந்திர மோடி கட்டிய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் நிலையைப் பாருங்கள்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, ஷாதரா, மத்திய தில்லி, வடகிழக்கு தில்லி, தெற்கு தில்லி, புதுதில்லி, தென்மேற்கு தில்லி, மேற்கு தில்லி, வடமேற்கு தில்லி மற்றும் வடக்கு தில்லியின் சில பகுதிகளில் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Flooding in the new Parliament complex Congress criticizes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.