நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்

நாடாளுமன்றத்தில் பேசாமல் ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருப்பதாக பிரதமர் மோடியை கார்கே விமர்சித்துள்ளது குறித்து...

News image

மல்லிகார்ஜுன கார்கே - ஏஎன்ஐ

Updated On :10 ஆகஸ்ட் 2026, 9:52 pm IST

நாடாளுமன்றத்தில் பேசாமல் ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஆக. 10) விமர்சித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய அவர்,

ராமர் கோயில் விவகாரத்தில், மோடிஜியின் நம்பிக்கைக்குரிய அறங்காவலர்களே திருட்டில் ஈடுபட்டனர். இது குறித்த விவரங்களை பிரதமர் தாமே வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

கடந்த 15 நாள்களில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசவில்லை. இந்தப் பிரச்னைகள் அனைத்திற்காகவும் நாங்கள் போராடி வருகிறோம்.

நாங்கள் விவாதத்தை விரும்புகிறோம். அவர்கள் (அரசு) ஏன் விவாதிக்க விரும்பவில்லை? மற்ற விவகாரங்கள் குறித்து அவர்கள் அறிக்கை அளிக்கிறார்கள்; ஆனால் இந்த விவகாரம் குறித்து ஏன் அறிக்கை அளிக்கவில்லை? நாங்கள் ஒரு அறிக்கையை மட்டுமே கேட்கிறோம்.

இதற்கு அவர்களிடம் பதில் இல்லை. அவர்களால் அவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்பு; பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுமே பொறுப்பு.

மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் கொடுமைகள் குறித்து, அமித் ஷா அவைக்கு வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கடந்த 17 நாட்களாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர் வருவதே இல்லை. பிரதமர் மோடியோ ரீல்ஸ் போட்டுக்கொண்டு இருக்கிறார் என கார்கே குறிப்பிட்டார்.

Summary

PM Modi makes reels, Amit Shah stays away Congress chief Mallikarjun Kharge targets govt on Parliament logjam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.