மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவினர் தயாராக வேண்டும்: அமைச்சர் பெஞ்சமின்

எவ்வித பிரச்னையின்றி வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் அடுத்து வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவினர் எதிர்கொள்ளத் தயாராக

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:42 pm

DIN

எவ்வித பிரச்னையின்றி வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் அடுத்து வர இருக்கிற உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவினர் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் தெரிவித்தார். 
 திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு கிராமத்தில் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாடுதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   கூட்டத்துக்கு, மேற்கு மாவட்டச் செயலாளரும், பொன்னேரி எம்எல்ஏவுமான சிறுணியம் பலராமன் தலைமை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் எஸ்.ஜீவாசுப்பிரமணி, பி.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .  
கூட்டத்தில் அமைச்சர் பா.பெஞ்சமின் பேசியதாவது: அதிமுகவில் எளிய தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும். அதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிவகுத்து தந்துள்ளார். அந்த வகையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கத் தயாராக வேண்டும்.
அதேபோல்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு கிளையிலும் சிறப்பாக கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்றார். 
கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம்.சம்பத்குமார், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ரா.மணிமாறன், மாநில சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஜாவித் அகமத் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் ஒன்றியச் செயலாளர் புட்லூர் ஆர். சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். வேப்பம்பட்டு ஊராட்சி செயலாளர் கோசலராமன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.