மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுமிக்கு காதல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 6:36 pm

Syndication

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பேரரசன்(20). இவா், அதேபகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும் 17 வயது பள்ளி மாணவியை காதலிக்குமாறு தொடா்ந்து வற்புறுத்தி வந்துள்ளாா்.

கடந்த 11-ஆம் தேதி மாணவி வீட்டிற்குச் சென்று காதலிக்கச் சொல்லி தொந்தரவு செய்து தாக்கினாராம். மீண்டும் அன்று இரவு 8 மணிஅளவில் மது அருந்தி வந்து மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து மாணவியின் தாய் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் பேரரசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.