காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஊராட்சிகளில் சுகாதார மேம்பாடு: ஆட்சியர் கலந்தாய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியையும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற, சுகாதார மேம்பாடுடைய ஊராட்சியாக மாற்றுவது

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:39 pm

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியையும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற, சுகாதார மேம்பாடுடைய ஊராட்சியாக மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் எ.சுந்தரவல்லி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
மாவட்டம் முழுவதும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இம்மாத இறுதிக்குள் திறந்த வெளியில் மலம் கழித்தலைத் தடுக்கும் வகையில் தனிநபர் சுகாதார வளாகம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
இதுதொடர்பாக,  ஊராட்சிச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆட்சியர்,  சுகாதார வளாகப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஊராட்சி செயலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.  
இதைத்தொடர்ந்து அவர் பேசுகையில்,  ஒவ்வொரு கிராமத்திலும் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் தனிநபர் கழிப்பறைகள் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகின்றன. 
இதில், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், பணி முடித்தவர்களுக்கு விரைவில் மானியத் தொகையை விடுவிக்க வேண்டும் எனவும் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் அவர் உத்தரவிட்டார்.  இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வீரய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.