பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அதிமுக ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

திருவள்ளூரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 9:54 pm

DIN

திருவள்ளூரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர். 
திருவள்ளூரில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார். இதில் , ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் பேசினர். 
கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார், திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன், எம்.ஜி.ஆர் இளைஞர் மன்ற மாநில நிர்வாகி சம்பத்குமார், முன்னாள் நகராட்சித் தலைவர் கமாண்டோ பாஸ்கர், ஒன்றியச் செயலாளர் புட்லூர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.