நூலகத்தில் பள்ளி மாணவர்கள் 107 பேர் உறுப்பினராக சேர்ப்பு
பொன்னேரி வட்டம், மெதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்ப்புற நூலகத்தில் பள்ளி மாணவர்கள் 107 பேர் புதிய உறுப்பினர்களாக வியாழக்கிழமை சேர்க்கப்பட்டனர்.


பொன்னேரி வட்டம், மெதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்ப்புற நூலகத்தில் பள்ளி மாணவர்கள் 107 பேர் புதிய உறுப்பினர்களாக வியாழக்கிழமை சேர்க்கப்பட்டனர்.
மெதூர் கிராமத்தில், திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் ஊர்ப்புற நூலகம் அமைந்துள்ளது. ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பள்ளி மாணவர்களின் அறிவை மேம்படுத்தும் வகையில் அவர்களை நூலக உறுப்பினராக்க மாவட்ட நூலகத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன் பேரில் பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் 107 பேர் மெதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊர்ப்புற நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கான உறுப்பினர் கட்டணத்தை பாக்கம் சித்த மருத்துவர் தமிழன் வழங்கினார். அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வகணேசன், பொன்னேரி கிளை நூலகர் சம்பத், மெதூர் ஊர்ப்புற நுலகர் தியாராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...