கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தனியார் வீடு கட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு: கிராம மக்கள் சாலை மறியல்

குறுகிய சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டுவதால் பேருந்து வந்து செல்வதற்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டுவதை நிறுத்தக்கோரி அரசு பேருந்து சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated On :9 ஜூலை 2018, 10:42 pm

DIN

குறுகிய சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டுவதால் பேருந்து வந்து செல்வதற்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணி ஒன்றியம் சிறுகுமி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகனம்மா(46). இவர், சாலையை ஆக்கிரமித்து புதியதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து, தனியார் வீடு கட்டுவதை நிறுத்த வேண்டும். குறுகிய சாலையில் வீடு கட்டினால், இவ்வழியாக பேருந்துகள் செல்ல முடியாது என கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி டி.எஸ்.பி. சேகர், திருத்தணி வட்டாட்சியர் செங்கலா, துணை வட்டாட்சியர் மணிவாசகம், வருவாய் ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, வீடு கட்டும் இடம் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் என்றும், பேருந்துகள் செல்வதற்கு வசதியாக பத்து அடி நிலத்தை இலவசமாக கொடுத்துள்ளதாகவும் நில உரிமையாளர் மோகனம்மா கூறினார். 
இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.