திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் புதிதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 நகராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
புதிதாக நியமனம் செய்யப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் பணியிடம், பெயர் மற்றும் செல்லிடப்பேசி எண்கள் (அடைப்புக்குறிக்குள்) விவரம்:
திருவள்ளூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியம் (பிரபு - 9445169026), அம்பத்தூர் நகராட்சி (லோகநாதன் - 9677280651), மாதவரம் நகராட்சி (கஸ்தூரி - 9865390140), திருவொற்றியூர் நகராட்சி (ஜெயகோபால் - 9841453114), திருவேற்காடு நகராட்சி (சுகாநந்தம் - 8148936388), திருத்தணி நகராட்சி மற்றும் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் (சிவக்குமார் -9994070767), பூந்தமல்லி நகராட்சி (வேலவன் -9443788693), ஆவடி நகராட்சி (அறிவுச்செல்வன் -9094414444), வில்லிவாக்கம் ஒன்றியம் (ரவிச்சந்திரன் -9944333526), சோழவரம் ஊராட்சி ஒன்றியம் (ராஜாமுகமது - 9444164617), ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஒன்றியம் (செல்வராசு -9940218958), புழல் ஊராட்சி ஒன்றியம் (சிவசங்கரன் -9894728409), மீஞ்சூர் ஒன்றியம் (சேகர்- 8248335631), கடம்பத்தூர் மற்றும் பூண்டி ஒன்றியம் (சுந்தரமூர்த்தி - 8122227055), கும்மிடிப்பூண்டி ஒன்றியம் (இளங்கோவன் - 9952925641), எல்லாபுரம் ஒன்றியம் (ஜெயவேல் - 9994237448) ஆகியோர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உணவு வணிகம் செய்வோர் உணவு பாதுகாப்புத் துறையிலிருந்து உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெற ஜ்ஜ்ஜ்.ச்ள்ள்ஹண்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து உரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






